சுரேஷ் கிருஷ்ணா 


தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ரி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கோலிவிட்டின் டாப் நடிகர்களுடன் மட்டுமே பயணித்தவர் ரஜினிகாந்தின் பெரும்பாலான ஹிட் படங்களை இயக்கியவர்.   அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா என அடுத்தடுத்த ரஜினி படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணாதான். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என பிராந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் தனது ஆளுமையை செலுத்தியவர்






சத்யா படத்தில் சூர்யா: 


சுரேஷ் கிருஷ்ணாவிற்கு மார்கெட்டை ஏற்படுத்திய திரைப்படம்  சத்யா. 1998 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்த சத்யா  படத்தில்தான் சுரேஷ் கிருஷ்ணா கோலிவுட்டில் இயக்குநராக களமிறங்கினார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் நாடு மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கொண்டது. காதல் டிராக்கில் மற்ற நடிகர்கள் போன சமயத்தில் குறிப்பு உணர்ந்து நாங்கள் செயல்பட்டோம் என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. அந்தந்த காலக்கட்டத்திற்கு சூழலுக்கும் ஏற்ற மாதிரியான படங்களைத்தான் நாம் கொடுக்க வேண்டும் என்றவர், தற்போது சத்யா படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தால் சூர்யா அல்லது அருண் விஜய்யை ஹீரோவாக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்றார். அருண் விஜய் சத்யா படத்தில் நடிக்க வேண்டும் என சுரேஷ் கிருஷ்ணாவை அனுகினாராம் ஆனால் அது கமல்ஹாசன் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என சுரேஷ் கிருஷ்ணா பிளான் செய்திருக்கிறார்.


 






அண்ணாமலையில் விஜய் :


அதே போல நேற்று ( ஜூன் 27) வெற்றிகரமாக 30 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை திரைப்படம் வெளியான சமயத்தில் 100 நாட்கள் கடந்து ஓடியது. அந்த படத்தில் ரஜினிகாந்திற்கு மாற்றாக யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்  என கேட்டதற்கு சுரேஷ் கிருஷ்ணா சற்றும் யோசிக்காமல் விஜய் என பதிலளித்தார். முன்னதாக சுரேஷ் கிருஷ்ணாவிடம் அண்ணாமலை போல ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் கேட்டிருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட கூட்டணியுடன் நடிகர்கள் படம் எடுக்க வேண்டும் என நினைத்தால் நான் தயாராக இருக்கிறேன் என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். விஜய் அண்ணாமலை படத்தின் சவால் விடும் சீனை நடித்து காட்டிதான் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது.