அர்ஜூன் :
”யாருப்பா இந்த பையன் பார்க்க ப்ரூஸ்லி மாதிரியே இருக்காரு “ என 80 90 களில் இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் அர்ஜூன். திரைத்துறையில் களமிறங்குவதற்கு முன்னதாகவே பல சண்டைப்பயிற்சிகளை எடுத்துக்கொண்ட அர்ஜுனுக்கு , கோலிவுட் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தை வாங்கிக்கொடுத்தது. ஆக்ஷனாக இருந்தாலும் சரி , செண்டிமெண்டாக இருந்தாலும் சரி , ரொமான்ஸாக இருந்தாலும் சரி அர்ஜுன் தனக்கென தனி பாணி வைத்திருக்கிறார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்தால் ஹீரோதான் என இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என தனது பங்களிப்பை சினிமாவிற்கு கொடுத்து வருகிறார்.
அப்பா பொண்ணு ஐஸ்வர்யா !
அர்ஜுனிற்கு இரண்டு மகள்கள் , மூத்த மகள்தான் ஐஸ்வர்யா அர்ஜூன். இவருக்கு அப்பாவை போல சினிமா துறையில் அதிலும் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் . இருவருக்குமான bonding நண்பர்கள் போன்றது. அவ்வபோது இருவரும் ஒருவரை ஒருவர் பொதுவெளியில் மாட்டிவிடுவது ஒன்றும் புதிதல்ல . அப்படித்தான் ஒருமுறை ஐஸ்வர்யா தனது அப்பா , அம்மாவிடம் நிறைய பொய் சொல்லுவார் என தெரிவித்திருந்தார். ஏன் என கேட்டதற்கு அர்ஜூன் அடிக்கடி ஃபிளைட்டை மிஸ் செய்துவிடுவாராம் . ஆனால் அதனை தனது மனைவியிடம் சொன்னால் கோவப்படுவார் என ஃபிளைட் டிலே என மெஜேஸ் அனுப்பிவிடுவராம், இது போல 7, 8 முறை நடந்திருக்கிறதாம். அர்ஜூன் தனது குடும்பம் மீது அதீத பாசம் கொண்டவர் . அது கண்மூடித்தனமான பாசம் என்கிறார் ஐஸ்வர்யா. அதாவது தனது குடும்ப உறுப்பினர்களை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் , அர்ஜூனால் பொருத்துக்கொள்ளவே முடியாதாம் . எதிர் தரப்பில் இருப்பவர் ஆணாக இருந்தால் நிச்சயம் கெட்ட வார்த்தையில்தான் பேசுவார் என்கிறார் மகள். பெண்களாக இருந்தால் அப்பா ஒருபோதும் வார்த்தைகளை தவறாக பயன்படுத்த மாட்டார் , முன்புதான் அப்பாவுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதில் பிரச்சனை இருந்தது. தற்போது குறைந்துவிட்டது என்கிறார் ஐஸ்வர்யா .
டோலிவுட்டில் மகளை அறிமுகப்படுத்தும் அர்ஜூன்:
ஐஸ்வர்யா அர்ஜூன் பட்டத்து யானை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஆனால் அந்த படம் அவரும் பெரிய மார்க்கெட் எதையும் உருவாக்கவில்லை. அதன் பிறகு அர்ஜூனே தனது மகளை வைத்து சொல்லிவிடவா என்னும் திரைப்படத்தை இயக்கினார் அதுவும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தெலுங்கில் மீண்டும் மகளை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அர்ஜூன் . இந்த படத்தில் விஷ்வக் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னதாக நடத்தப்பட்டது. அதில் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.