அலங்கு 


உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி சக்திவேல். இவர் தற்போது அலங்கு என்கிற படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது . குனா நிதி , செம்பன் வினோத் , சரத் அப்பானி , காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கூடுதலாக நாய் ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்க இருக்கிறார். அலங்கு படத்தின் டிரைலரை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து வெளியிட்டார். படத்தின் டிரைலரை பார்த்து ரஜினிகாந்த் படக்குழுவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். 


அலங்கு டிரைலரை பாராட்டிய ரஜினிகாந்த்


அலங்கு படக்குழுவை சந்தித்து படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் பார்வையிட்டார். டிரைலரை பார்த்து  " ப்பா என்ன சக்திவேல்..படம் கண்டிப்பா சூப்பர் ஹிட்"  என படத்தின் இயக்குநரை பாராட்டினார். தொடர்ந்து படத்தின் டிரைலரைப் பற்றிய தனது எண்ணங்களை ரஜினி பகிர்ந்துகொண்டார். வரும் டிசம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது .