ஸ்ரீபெரும்புதூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன பேருந்து மீது ராட்சத டாரஸ் லாரி மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பத்துக்கு மேற்பட்டோருக்கு பலத்த காயம் அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பேருந்து யூடர்ன் செய்ய திரும்பியபோது பின்னால் வந்த ராட்சத டாரஸ் லாரி வேகமாக மோதியதில் தனியார் நிறுவன பேருந்து தலைகீழாக கவிழ்ந்தும் டாரஸ் லாரியின் முன்பக்கம் நொறுங்கியும் அதே போன்று சென்னையில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற இன்னோவா காரின் மீது பேருந்து மோதியது.
இதில் தனியார் நிறுவன பேருந்தில் பயணித்த ஓட்டுனர் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர். சாலையின் குறுக்கே கடந்து சென்ற ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதோடு லாரியின் ஓட்டுநர் லாரி முன்பக்கம் இடர்பாடுகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டார்.
லாரியின் ஓட்டுநரை ஜேசிபி உதவியுடன் மீட்டு அனைவரையும் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இந்த கொடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன