ஆமீர் கான்


பாலிவுட்டின் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஆமீர் கான். கமர்சியல் படங்களில் கரியரைத் தொடங்கிய ஆமீர் கான் மற்ற ஸ்டார்கள் பயணித்த டிராக்கில் பயணிக்க விரும்பவில்லை. லகான் , ரங்க் தே பசந்தி , தேரே ஜமீன் பர் , கஜினி , பி.கே , தங்கல் என பல மாறுபட்ட கதைக்களங்களில் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்துள்ளார் ஆமீர் கான். நடிப்பு தவிர்த்து தனது முன்னாள் மனைவி இயக்கிய லாபதா லேடீஸ் படத்தையும் ஆமீர் கான் தயாரித்துள்ளார். 


ஆமீர் கான் பற்றி கரீனா கபூர்


ஆமீர் கான் கடந்த 2022 ஆம் ஆண்டு லால் சிங் சட்டா படத்தை தயாரித்து நடித்தார். கரீனா கபூர் இப்படத்தில் நாயகியாக நடித்தார். ஹாலிவுட்டில் டாம் ஹாங்ஸ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் ரீமேக் ஆக இப்படம் உருவாகியது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள் தாமதமாக வெளியானது.  ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை. இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தான் கர்ப்பமாகியதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.


" கொரோனா லாக்டவுனில் ஒன்றரை வரும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது தான் கர்ப்பமாகி இருந்தேன். எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரியவில்லை. என் கணவர் சைஃப் அலிகான் ஆமீர் கானிடம் பேசச் சொன்னார். ஆமீர் கானுக்கு ஃபோன் செய்து நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு என்ன சொல்ல வென்று தெரியவில்லை. இந்த படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டால் கூட பரவாயில்லை. ரொம்ப சாரி என்று நான் என்ன என்னமோ பேசினேன்.  நான் உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம்.  என்று ஆமீர் கான் என்னிடம் சொன்னார் .


லால் சிங்க் சட்டா படம் ஓடாதபோது ஆமீர் கான் மனமுடைந்து போனார். இந்த படம் தோல்வி ஆனதால் என்னிடம் பேசமால் இருந்துவிடாதீர்கள் என்று ஆமீர் கான் என்னிடம் கேட்டார். ஏனால் இந்த படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்." என கரீனா கபூர் தெரிவித்துள்ளார்