Rajinikanth Annatthe Teaser: விநாயகர் சதுர்த்தி அன்று அண்ணாத்த டீசர்?

ஏற்கெனவே தீபாவளிக்குப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Continues below advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் டீசர் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தீபாவளிக்குப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவல் தற்போது கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Continues below advertisement

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுவிட்டன. இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்துக்கும் ரஜினிகாந்த் டப்பிங் பேசிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய நடிகர்கள் சிலரும் படக்குழுவில் தற்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் படக்குழுவில் இணைந்ததாக அண்மையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.இவர், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலாயுதம் படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். நடிகர் விஜய் நடித்த தலைவா படத்திலும் இவர் நடித்திருந்தார். பின்னர், தமிழில் மெகாஹிட் அடைந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தற்போது, இவர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவா இயக்கத்தில் இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏற்கனவே நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ்  ஆகியோர் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரஜினிகாந்த் அல்லாத பிற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 
படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் படம் அறிவித்தபடி தீபாவளிக்கு வெளியாகுமா என்கிற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.இதற்கிடையேதான் படத்தின் டீசர் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் விநாயகர் பக்தரான சிவா ஏற்கெனவே அஜீத்தை வைத்து இயக்கிய படங்களில் விநாயகரைப் பதிவு செய்யும் வகையிலான காட்சிகளை வைத்திருப்பார். அதற்கு ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழுவினர் தகவலைக் கூறியுள்ளனர். 
 

Continues below advertisement
Sponsored Links by Taboola