இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கிவருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இருந்தப்போதும் ஒவ்வொரு கோயில்களிலும் நிர்வகிக்க பலர் பணியமர்த்தப்படுகிறார்கள். அதன்படி, இந்து சமய அறிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தட்டச்சர், ஓதுவர், கால்நடை பராமரிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதிகளைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..
தட்டச்சர் பணிக்கானத் தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இதோடு கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியைக்கொண்டுள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ரூ. 15,300 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பணிக்கானத் தகுதிகள்: சென்னை ஏகாம்பரேஸ்வர் திருக்கோயிலின் அர்ச்சகராக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழில் எழுத படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகம பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ்களை கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.11, 600 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று பரிசாரகர், மேளம் செட், காவலர், இரவு காவலர், கால்நடை பராமரிப்பாளர், ஓதுவார் ஆகிய அனைத்துப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் 35 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட தகுதியும் , ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், இப்பணிக்கான விண்ணப்பத்தை திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ. 100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்தோடு உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை - 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.