இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,
“ ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன். ஆனால், அதைப் பற்றி இப்போது பகிர முடியாது. தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக உணர்வுகள் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளது. அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் இல்லை.” என்று கூறியுள்ளார்.
பின்னர், ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆளுநரிடம் ஆலோசனை நடத்தினீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் தற்போது ஏதும் அதைப்பகிர முடியாது என்று கூறினார். பின்னர், ரஜினிகாந்திடம் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தற்போது ஏதும் கருத்து இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர் உடனடியாக ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ரசிர்களுக்கு, அரசியலுக்கு வருவதாக 2018ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்தார். சட்டசபை தேர்தல் நெருங்கிய வேளையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதன்பின்னர், அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Rajini: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன காரணம்?
மேலும் படிக்க : GST Hike: பால்,தயிர்க்கு GST வரி எதற்கு? கோமியத்திற்கு 50% GST ஏற்றிக்கொள்ளுங்கள் - மக்களவையில் எம்.பி செந்தில்குமார் ஆவேசம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்