இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,252 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.42,016 ரூபாயாக விற்பனையாகிறது. 


அதேபோல் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,850ஆகவும், சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்




வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ஒரு கிராம் விலை 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்க ஆபரணங்கள்


இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.




சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.


அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது. 


தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. ,இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.




மேலும் படிக்க: Crime : வன்கொடுமை.. தலை துண்டிப்பு.. அரசுத் தேர்வுகளுக்கு படித்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞனின் பரபரப்பு வாக்குமூலம்


Crime Pocso : காதல் வசனங்கள்.. துபாயில் இருந்து இன்ஸ்டாகிராம் வலை..16 வயது சிறுமிக்கு வன்கொடுமை.. பாய்ந்தது போக்சோ


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண