Rajini in Nayan Marriage : ஜோராக நடைபெற்ற நயன் - விக்கி திருமணம்: மாஸ் எண்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினி..!

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணத்தில் நேரில் பங்கேற்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

Continues below advertisement

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும், திரைப்பட இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கும் இடையே இன்று கோலாலகமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியாவின் முக்கிய திரைப்பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் ஷாரூக்கான், நடிகர்  சூர்யா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

Continues below advertisement

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கருப்புநிற காரில் வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். காரில் இருந்து இறங்கிய அவரை பேட்டரி கார் மூலம் திருமணம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். காலை 10.30 மணியளவில் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் நேரில் வாழ்த்தினார்.

 

பின்னர், திருமணத்தில் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்திய பிறகு தனது வீட்டிற்கு திரும்பினர். அவர் திரும்பும்போது அங்கு கூடிய ரசிகர்களைப் பார்த்து அவர் கையசைத்துவிட்டு திரும்பினர். அவரை பார்த்த ரசிகர்கள் சிலர் தலைவா, தலைவா என்று கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola