தென்னிந்தியாவின் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இன்று மாமல்லபுரத்தில் திருமண நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் பிரபல திரைபிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் சுமார் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதியம் இலவச உணவு வழங்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளார். நயன்தாராவின் இந்த செயலால் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.




நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு மற்றும் சில இலவச உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவரது ரசிகர்களும் ஆங்காங்கே செய்து வருகின்றனர். நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் முதலில் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வலியுறுத்தலினால் திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.


ஆனால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலான நபர்களே பங்கேற்க அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இதன்படி, மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் நயன்தாரா திருமணத்திற்கு பிரபல திரைப்பிரபலங்களான கே.எஸ்.ரவிக்குமார், எடிட்டர் மோகன், இயக்குனர் மோகன்ராஜா, கலா மாஸ்டர், தொகுப்பாளர் டிடி உள்ளிட்ட பலர் நேரில் பங்கேற்று வாழ்த்தி வருகின்றனர்.




நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமண நிகழ்ச்சி முழுவதும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண