Rajinikanth: இதோ வந்துட்டாருல தலைவர்! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் ஐக்கியமான ரஜினிகாந்த் குடும்பம்

ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் வருகைத் தந்துள்ளார்

Continues below advertisement

வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

Continues below advertisement

ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின்  தலைவர் முகேஷ்  - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து இசை நிகழ்ச்சியை நடத்தினார். உலகம் முழுவதிலும் இருந்தும் பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகைத் தந்துள்ளார். முன்னணி கிரிக்கெட் வீரர்கள்., பாலிவுட் திரைப்பிரபலங்கள் என ஜாம் நகர் பகுதி விழாக் கோலம் பூண்டுள்ளது. மூன்றாவது நாளான இன்று தென் இந்திய பிரபலங்கள் ஒவ்வொருவராக வருகை தந்து வருகிறார்கள். முன்னதாக தெலுங்கு நடிகர் ராம் சரன் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் ஜாம் நகர் வந்து சேர்ந்துள்ளார்.

இன்று காலை விமானம் வழியாக ஜாம் நகர் வந்து சேர்ந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து நேராக  நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காணப்பட்டார்கள். 

த.செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் இந்த  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எகானமி கிளாஸ் டிக்கெட்டில்  பயணம் செய்து வந்து சேர்ந்துள்ளார். அவர் விமானத்தில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது .


மேலும் படிக்க : Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!

Continues below advertisement