Chennai Traffic Diversion: பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னயில் முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னை வரும் பிரதமர் மோடி:

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிரதமர் மோடி  04.03.2024 அன்று மாலை 17.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்:

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Continues below advertisement

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும்.

  • மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை
  • இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு
  • மவுண்ட் பூன்னமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.
  • அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு
  • விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)
  • அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை
  • தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரதமரின் பயண விவரம்:

மகாராஷ்ராவில் இருந்து நாளை புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.20 மணியளவில் கல்பாக்கம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தை பார்வையிடுகிறார்.

தொடர்ந்து, அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம்  வந்தடைகிறார் மோடி. விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, நாளை மாலை 5 மணிக்கு நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு சென்றடைகிறார்.  அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நாளை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கிறார். 


மேலும் படிக்க

Polio Camp: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. பெற்றோர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்