Chandramukhi2: சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு வாசு மற்றும் ராகவா லான்ஸை ரஜினி பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா எனப் பலர் நடித்துள்ளனர். படத்தில் ரஜினியை சந்திரமுகி பழிவாங்கும் த்ரில்லர் கதையும், காமெடி காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 கதையை பி.வாசு இயக்கியுள்ளார்.
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளியான படத்தின் டிரெய்லரும், பாடல்களும் ரசிகர்களிடையே டிரெண்டாகி வந்தன.
இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளதால் பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தன. நேற்று படம் ரிலீசான நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தன. குடும்பத்துடன் பார்க்கும் எண்டர்டெயிமெண்ட் படம் என்பதால் விடுமுறை நாட்களில் சந்திரமுகி 2 அதிக வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரமுகி படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, இயக்குநர் பி.வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகிய.. புதிதாக, வேறு ஒரு கோண்டத்தில்ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாகசினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர்திரு.வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும்தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும்படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.... என அறிக்கை மூலம் ரஜினி பாராட்டியதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் சந்திரமுகி 2 படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் பேய் அவதாரம் ஆகியவற்றால் 'சந்திரமுகி 2' படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.
மேலும் படிக்க: Aranmanai 4: சுந்தர்.சி ரசிகர்களே ரெடியாகுங்க.. பொங்கல் ரேஸில் ‘அரண்மனை 4’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!