Thalaivar170 Squad: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிப்பவர்களின் பெயர் நாளை வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 


தலைவர் 170:


சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான த.செ.ஞானவேல், ரஜினியின் 170 படத்தை இயக்குகிறார். ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக எடுக்கப்பட திட்டமிட்டுள்ள தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் மட்டும் இல்லாமல், மாமன்னன் மூலம் கொண்டாடப்பட்ட ஃபகத் பாசில், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. 


நாளை முக்கிய அறிவிப்பு:


இந்த நிலையில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு வரும் 4ம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கும் என்ற தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தலைவர் 170 படத்தில் இணைந்து நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என படத்தை தயாரிக்க உள்ள லைகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இறுதிச் சுற்று படம் வழியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய நடிகை ரித்திகா சிங் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் போலீஸாக நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், ரித்திகாவும் போலீஸாக நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






 


அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள லியோ படம் ரிலீசாக உள்ளதை ஒட்டி ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு வெளியிட்டு வருகிறது. லியோ படம் ரிலீஸ் டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக  ரஜினியின் தலைவர் 170 படத்தின் அப்டேட் வெளியாக இருக்கிறது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 






மேலும் படிக்க: Thalaivar 170: அட.. தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங்.. ரஜினிகாந்துடன் வரிசையாக இணையும் பிரபலங்கள்!


Bigg boss 7 Tamil: கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!