சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் ’லெஜண்ட்’ திரைப்படத்தின் காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடத்தில் சில சலசலப்புகளை உண்டாக்கியது . ஜேடி அண்ட ஜெர்ரி இந்த படத்தை இயக்குகிறார்கள் , இதற்கு முன்பு இவர்கள் தமிழில் உல்லாசம் மற்றும் விசில் திரைப்படத்தை இயங்கினார்கள் .கடந்த ஆண்டு இந்த படத்திற்கான பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது இந்த படத்தில் விவேக் ,ரோபோ சங்கர், ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் நடிக்கிறார்கள் .
இந்த படத்தின் ஷூட்டிங் ஹிமாலயாஸ் மற்றும் சில இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது, நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அவர்களை கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்த கட்சி இணையத்தளத்தில் வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது . சூப்பர் ஸ்டார் உடன் pro நிக்கில் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் மற்றும் திரைப்பட குழுவினர்கள் இருந்தார்கள் .