பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தது நல்ல முயற்சி எனவும், இந்நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி அக்கா பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் என பகிர்கிறார் பிரபல நாட்டுப்புறப் பாடகி ராஜலெட்சுமி.


மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி. நெடுவாசல் போராட்டக்களத்தில், டெல்டா மக்கள்படும் துயரங்களைக் குறித்து ராஜலெட்சுமி பாடிய பாடல் சோசியல் மீடியாவில் செம வைரலானது. இதனையடுத்து சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செந்தில் மற்றும் ராஜலெட்சுமி, சின்ன மச்சான் என்ன புள்ள என்ற பாடல் முதல் தற்போது புஷ்பா படத்தில் ராஜலெட்சுமி குரலில் இடம் பெற்ற வாய சாமி பாடல் வரை அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையைக் கிளப்பிவருகிறது.



குறிப்பாக இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும் இந்நிலையில், தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றும் தங்கள் பாடல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். தற்போது வாய சாமி என்ற பாடல் வைரலாகிவரும் நிலையில், சமீபத்தில்  பேட்டி ஒன்றில் பேசிய ராஜலெட்சுமி, இப்பாடல் பாடிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்ததோடு பிக்பாஸ் தாமரைச்செல்வி குறித்தும் பேசியிருக்கிறார்.






அதில், வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே நாடகத்தில் சேர்ந்தவர் தான் தாமரைச்செல்வி என்னும், தற்போது மேடை நாடகங்களில் நடனமாடி வருகிறார் என்றும், நான் தாமரைச்செல்வி அக்காவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக, திண்டுக்கல்லில் மேடை நிகழ்ச்சியில் நடனமாட வந்தபோது சந்தித்தேன் என்றார். அன்றிலிருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும் எனவும் தாமரைச்செல்வி எனக்கு நல்ல பழக்கம் என தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு நாங்கள் சந்தித்து பேசிவே  இல்லை.


இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப்பிறகு தாமரைச்செல்வி அக்காவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தப்போது, மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது என்றும், இந்த முயற்சியே நல்ல விஷயம் எனப் பகிர்ந்துள்ளார் ராஜலெட்சுமி. மேலும் எங்கேயோ இருந்த நாடகக்கலைஞரை அறிமுகம் செய்திக்கிறீர்கள். இது அவர்களுடைய வாழ்க்கைக்கும், நாடகக் கலைக்கும் ஒரு பூஸ்ட் ஆக அமையும் என்று கூறியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நாட்டுப்புறக் கலைஞராக புகழ்பெற்ற தாமரைச்செல்வி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிவருகிறார். ஆரம்பத்தில் யார் இவர் என்று தெரியாமல் இருந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் மூலம் இவரின் திறமை பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகியிருக்கிறது. மேலும் பிக்பாஸ் தொடக்கத்தில் எதுவும் தெரியாமல் சகப் போட்டியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு விளையாடி வந்த இவர் தற்போது அனைத்துப் போட்டியாளர்கள் உட்பட கமல்ஹாசனே ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.



குறிப்பாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், விறுவிறுப்பாகப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. ரசிகர்கள் மத்தியில் பிரபலமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் மேடைக்கலைஞரான தாமரைச்செல்வி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார். இது தாமரைக்கும் மட்டுமில்லாமல், மேடை கலைஞர்கள், நாடக கலைஞர்கள் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.