அசாம் மாநில அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் நேற்று ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படி அவர்கள் மத்தியில் வரவேற்பை பெருமளவில் அவர் அறிவித்தது என்ன?
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதில்,”அசாம் மாநில அரசு அதிகாரிகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7-ஆம் தேதிகளை தங்களுடைய குடும்பத்துடன் செலவிட வேண்டும். அதற்காக அவர்களுக்கு இந்த நாட்களில் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை உயர்மட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் முதல் கடைசி நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் அரசு சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ”அசாம் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜனவரி 6 மற்றும் 7-ஆம் தேதி விடுமுறை எடுத்து கொள்ளலாம். இந்த நாட்களில் அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து செலவு செய்யலாம்” என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பெற்றோர்கள் இல்லாதவர்களும் இந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அசாம் அரசு இது தொடர்பான முடிவை எடுத்தது. அதில் ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நாட்களை தற்போது அசாம் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: பெண்களின் திருமண வயது குறித்த மசோதாவை விவாதிக்கும் நிலைக்குழுவில் எத்தனை பெண் எம்.பிக்கள் தெரியுமா?