புதிய ஆண்டான 2022-க்குள் அனைவரும் நுழைந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் இந்த வருடத்தை வரவேற்றிருக்கும் சூழலில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இதுவரை சினிமாவில் நடந்த சில விஷயங்கள்:


நயன் சிவன் துபாய் ட்ரிப்


கோலிவுட்டின் காதல் ஜோடிகளில் இருப்பவர்களான நயன்தாராவும் அவரது இணையான விக்னேஷ் சிவனும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்றனர்.






அப்போது அவர்கள் காதலுடன் புர்ஜ் கலிஃபாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.


கோவாவில் சமந்தா


திருமண வாழ்விலிருந்து வெளியே வந்த சமந்தா தற்போது தனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார்.






நிறைய பயணம் செய்யும் சமந்தா தன் கோவா பயணத்தின் புகைப்படங்களை பகிர்ந்தார். அந்தப் புகைப்படங்களை அனைவரும் ரசித்தனர்.


தாயாகும் காஜல் அக்ரவால்


விஜய், அஜித் உள்ளிட்டோருடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்களது திருமண வாழ்வில் மேலும் மகிழ்ச்சி சேர்க்கும்விதமாக புதிய உயிர் ஒன்றை பூமிக்கு பரிசளிக்க இருக்கிறார்கள் இருவரும்.






காஜல் கர்ப்பம் அடைந்திருக்கும் செய்தியை, கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


எமோஷ்னலான அல்லு அர்ஜுன்:


புஷ்பா திரைப்பட வெற்றி நிகழ்வில் அல்லு அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் புஷ்பா இயக்குநர் சுகுமார் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அவர் நன்றி தெரிவித்தார். "வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டுமே நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு உயிர் கொடுத்த என் பெற்றோர், எங்களை சினிமா உலகிற்கு கொண்டு வந்ததற்காக என் தாத்தா, எனக்கும், சுகுமாருக்கும் உறுதுணையாக இருந்த சிரஞ்சீவி. 






ஆர்யாவுக்குப் பிறகு கார் வாங்கினேன் முதலில் நினைவுக்கு வந்தவர் சுகுமார் சார். நீங்கள் இல்லாமல் நான் ஒன்றும் இல்லை சார்" என்று உணர்சிவசப்பட்டு பேசினார்.


RRR ஒத்திவைப்பு


ராஜமௌலி இயக்கத்த்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா நடித்திருக்கும் RRR படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “நமது இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை.






பல மாநிலங்கள் திரையரங்குகளை மூடிக்கொண்டிருப்பதால், உங்கள் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்திய சினிமாவின் பெருமையை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம், சரியான நேரத்தில் நாங்கள் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


லிகர் டீசர் வெளியானது


விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் உள்ளிட்டோரு நடிக்கும் படம் லிகர். பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படமானது இந்தாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகிறது.


 



வலிமை சர்ட்டிஃபிக்கேட்டும், ட்ரெய்லரும்


ஹெச். வினோத்துடன் அஜித் இரண்டாவது முறை இணைந்திருக்கும் படம் வலிமை.  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இப்படமானது இரண்டு மணிநேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடியது.



அதேபோல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. U/A படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


பீஸ்ட் மாஸ் 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகும். இந்த சூழலில் புத்தாண்டையொட்டி பீஸ்ட் படத்தின் புதிய லுக் வெளியிடப்பட்டது.