சின்னத்திரை ரசிகர்களின் அபிமான ரியாலிட்டி ஷோகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல இளம் பாடகர்களின் திறமைகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது; இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பாடகர்கள் பல நல்ல வாய்ப்புகள் பெற்று மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களாக இருந்து வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் 9 :
பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு வெவ்வேறு போட்டிகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் 9 சீனியர்களுக்கான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் வின்னர் :
இதற்கு முன்னர் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டி நடைபெற்று அதன் இறுதிச்சுற்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு ட்ரினிடா, கிரிஷாங், நேஹா, அஃபினா மற்றும் ரிஹானா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் வின்னர் பட்டத்தை ஆர்.பி.கிருஷாங் வென்றார்.
ஆர்.பி.கிருஷாங் முதலமைச்சரிடம் வாழ்த்து :
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 2022 டைட்டில் வின்னராக பட்டம் வென்ற ஆர்.பி.கிருஷாங், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்; அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.