திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது  இறையூர் பேருந்து நிறுத்தத்தில்  பயணிகள் அரசு பேருந்தை பார்த்ததும்  நிறுத்தியுள்ளனர். பின்னர் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. அப்போது அதனை பின்தொடர்ந்து வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தில் பயணிகள் ஏறுவதை கண்ட அவர்கள் அதிவேகமாக பேருந்தை இயக்கி அரசு பேருந்தை வழியில் மடக்கி வழியில் டிக்கெட்டுகளை ஏன் ஏற்றுகிறாய் என கூறி அரசு பேருந்து ஓட்டுனரை தனியார் பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.  தனியார் பேருந்து ஓட்டுனர் ,அரசு பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென  சரமாரியாக தாக்கியுள்ளார். 


 


 






 


இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேருந்தில்  பயணம் செய்தவர்கள் தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டூழியங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 




 


வந்தவாசி அடுத்த சாலவேடு  அருகே  தனியார் மினி பேருந்து பள்ளத்தில் இறங்கியதால் விபத்துக்குள்ளானது இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தை அடுத்த சே.அகரம், கரியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேனில் வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை நவீன்குமார் ஓட்டினார். வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது நிலைதடுமாறிய வேன், சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த சம்பத்ராணி வயது ( 26), விஜி வயது (40), சுசீலாவயது (26), சின்னப்பொண்ணு வயது (50) உள்ளிட்ட 20 பக்தர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 பேரும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்