சன்டியில் சில மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட கயல் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் வகித்துவருவதோடு, மற்ற முன்னணி சீரியல்களைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.


பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் தொலைக்காட்சியின் முன் அமரவைத்தது சன்டிவியின் சீரியல்கள் தான். தற்போது தான் பல சேனல்களில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகிவருகின்றன. ஆனால் 90 களில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது சன்டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்கள் தான். குறிப்பாக கொரோனா காலக்கட்டம் மற்றும் தற்போது கூட மற்ற சேனல்களில் பழைய சன்டிவி சீரியல் ஒளிப்பரப்பட்டு வரும் நிலையிலும்  அதனையும் ரசிகர்கள் பார்த்து ரசித்துவருகின்றனர்..





அந்தவரிசையில் தற்போது மீண்டும் புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாகிவருகிறது. அதன் ஒரு பகுதியான அக்டோபர் மாதம் முதல்  ப்ரைம் டையமான இரவு 7.30 மணிக்கு கயல் என்ற புதிய சீரியல் சன்டிவியில் ஒளிப்பரப்பாகிவருகிறது .இந்த சீரியலில் விஜய்டிவியின் ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் மற்றும் ஜூ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா இருவரும் ஜோடியாக நடித்துவருகின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் மக்களிடம் சீக்கிரமாக இந்த  சீரியல் பிரபலமானது.


இதோடு மட்டுமின்றி கயல் சீரியலின் கதைக்களமும் இதற்கு காரணம் என்று கூறவேண்டும். ஆம் தந்தையை இழந்த குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்கும் பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளும், நிகழ்வுகளுமே கயல் தொடரின் கருவாகும். மேலும் தன்னுடைய தாய், சகோதரிகள், சகோதரர்கள் என அனைவருக்கும் உதவும் கரமாக உள்ளார் கயல். இந்த நிலை தான் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வதால் இச்சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் கயல் நண்பராக எழில் கதாபாத்திரத்தில் வரும் சஞ்சீவ்வின் நட்பு, காதல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் தான் தொடர் ஆரம்பித்த முதல் மாதமே 10.66 புள்ளிகளுடன்  ரேடிங்கில் முதலிடம் பிடித்தது.





இதனைத்தொடர்ந்து தற்போது வரை டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கிராமப்பெண்ணை கணவர் ஏமாற்றுவதாக கதைக்களத்தைக்கொண்ட சுந்தரி சீரியல் தான் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. 3 வது இடத்தை அண்ணன் தங்கை பாசத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியலும், 4 வது இடத்தில் ரொமான்டிக் சீரியலான ரோஜா சீரியலும் இடம் பிடித்துள்ளது.


 மேலும் 5 வது இடத்தில் கண்ணான கண்ணே சீரியலும், 6 வது இடத்தில் அம்மா மற்றும் மகளின் பாசத்தை வெளிக்காட்டும் அபியும் நானும் சீரியலுக்கும் கிடைத்துள்ளது. 7 வது இடத்தில் அன்பே வா சீரியலுக்கும் தாலாட்டு, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அன்பே வா, மெட்டி ஒலி, திருமகள், சித்தி 2, மகராசி ஆகிய சீரியல்கள் டிஆர்பியில் அடுத்தடுத்த இடத்தைப்பெற்றுள்ளது.