பிக்பாஸ் சீசன் 5, வீட்டினுள் நடந்த அத்தனை களேபரங்களுக்கும் இடையே இனிதே முடிந்துள்ளது. இந்த சீசனில் ராஜூ டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்பாக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார்.


இப்போது, பிக்பாஸ் ஃபீவர் முடிந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள பிக்பாஸ் ஓடிடி பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. இதில்,13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. 


இந்தநிலையில், திபுசிக்கு திபுசிக்கு பிக்பாஸ் என்று தொடங்கி கமல் சார் என்று கம்பீரமாக ஒலிக்கும் குரல் யார் என்று இன்று வரை பலரும் குழம்பிபோய் வருகின்றனர். முன்னதாக, விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மகாபாரதத்தில் சகுனி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த கோபி நாயர் என்று தகவல் பரவியது. சிறிது நாட்களுக்கு பிறகு கோபியும் இல்லை என்று தெரியவர, அட யாருப்பா இந்த குரலுக்கு சொந்தம்..? பிக்பாஸ் போட்டிக்கும் இவருக்கும் அப்படி ஒரு பந்தம் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 




அதன்பிறகு, பிக்பாஸ் என்னும் 'குருநாதா' சாஷோ என்று அனைவராலும் அறியப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் நடந்து முடிந்த 5 வது சீசன் முதற்கொண்டு கடந்த 5 சீசன்களாக இவர் மட்டுமே குரல் கொடுத்துள்ளார். அதேபோல், இவர் இதற்கு முன்னதாக எந்தவொரு நிகழ்ச்சியிலோ, படத்திற்கோ குரல் கொடுத்தது இல்லை என்பதும் பலரும் அறியபடாத ஒன்று. 


தற்போது, கடந்த பிக்பாஸ் 5 சீசன் முழுவதும் குரல் கொடுத்த சஹோ, வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசன் முழுவதும் இவர் 17 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். ஒரு மாதத்திற்கு சரியாக 5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் புதிய சீசனுக்கு மீண்டும் குருநாதாவின் கம்பீர குரல் நம் காதுகளில் 24 மணி நேரமும் ஒலிக்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண