இந்தியாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னிலியோன். இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியும், சில படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்தும் மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.




இந்த நிலையில், சன்னிலியோனின் பான்கார்டு எண்ணை பயன்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். இதனால் சன்னிலியோனின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சன்னிலியோன் தனது டுவிட்டர் பக்கத்தில், சில முட்டாள்கள் என்னுடைய பான்கார்டு எண்ணை பயன்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்கள். இதனால், எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.






ஆனால், அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலே அவரது பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது பழைய டுவிட்டை சன்னிலியோன் அழித்துள்ளார். பின்னர், தன்னுடைய பிரச்சினையை தீர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி என்று நன்றி தெரிவித்து சன்னிலியோன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சன்னிலியோன் தமிழில் வடகறி என்ற படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும், தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண