தன் கணவருடன் இணைந்து நடிகை சன்னி லியோன் குறும்பான இசைக் கச்சேரி நடத்தும் வீடியோ அவரது ரசிகர்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகையான சன்னி லியோன் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.


இன்றுவரை காதல் பறவைகளாக வலம் வரும் இந்தத் தம்பதிக்கு 2018இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் வருகின்றனர். தமிழில் வடகறி படத்தில் அறிமுகமான சன்னி லியோன், முன்னதாக ’ஓ மை கோஸ்ட்’ படத்தில்  நடித்துள்ளார். 


இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள சன்னி லியோன், தனது காதல் கணவருடன் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து தனது ரசிகர்களை பொறாமைக்கு ஆளாக்கியும், மகிழ்ச்சிப்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் முன்னதாக தன் கணவருடன் இணைந்து வீட்டில் ஜாலியாக இசைக்கச்சேரி நடத்தும் வீடியோ பகிர்ந்துள்ளார்.


கிட்டார் வாசிக்கும் தன் கணவருக்கு பக்க வாத்தியமாக அவரது தலையில் பாத்திரத்தைக் கவிழ்த்து அடித்து வாசித்து ஜாலியாக பொழுதைக் கழிக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


 






முன்னதாக தன்னுடன் நடிக்க இன்னும் திரையுலகில் சிலர் தயங்குவதாக பிரபல நடிகை சன்னி லியோன் வேதனை தெரிவித்திருந்தார்.


கவர்ச்சி நடிகையாக முதலில் அறிமுகமான சன்னி லியோன், அதில் இருந்து வெளியேறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது  இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


இதற்காக அனுராக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள சன்னி லியோன், ”இன்னும் திரையுலகில் சிலர் என்னுடன் பணியாற்றத் தயங்குகிறார்கள் என்றும்,இவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த படத்திற்காக ஆடிஷன் செய்ய அனுமதித்த அனுராக் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி என கூறியுள்ளார். அதேசமயம் இது வாழ்க்கையை மாற்றும் சரியான தருணம் என்றும், அனுராக் போன்ற ஒரு இயக்குனருடன் பணிபுரிவது எனது கேரியரின் முழு இயக்கத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன்” என முன்னதாகத் தெரிவித்துள்ளார்.