சன்னி லியோன் 19 வயதில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு பாலிவுட்டில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது மற்றும் ஒரு தொழிலதிபராக மாறுவது வரை நீண்ட தூரம் வந்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சன்னி லியோன், சமீபத்தில் லிங்க்ட்இனில் அறிமுகமானார். ஆனால், அந்த ஆப்பில் அவரது அனுபவம் அவ்வளவு இனிமையா இருக்கவில்லை. அவர் கணக்கை துவங்கிய உடன் லிங்க்ட்இன் அவரது கணக்கை முடக்கம் செய்தது.






சன்னி லியோன் கணக்கு முடக்கம்


சன்னி லியோன் தனது ப்ரொஃபைலை உருவாக்கிய ஒரு மாதத்தில் முடக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், சமூக வலைதளம் அது உண்மையானது அல்ல என்று கருதியுள்ளது. இதுகுறித்து பேச சன்னி லியோன் சனிக்கிழமையன்று ஒரு வீடியோவை வெளியிட்டார். சன்னி லியோன் தனது ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிட்ட விடியோவோடு, லிங்க்ட்இனைக் டேக் செய்தார். அந்த விடியோவில், "அனைவருக்கும் வணக்கம், @LinkedIn இல் இணைந்த ஒரு மாதம் கழித்து அது நான் இல்லை என்று கூறி எனது கணக்கைத் முடக்கினர்" என்று அவர் கூறுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: Supreme Court : மனிதக்கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்..முடிவுக்கு கொண்டு வர என்னதான் செய்தீர்கள்?..மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..!


காரணம் கூட சொல்லவில்லை


மேலும், “நான் புதிதாக துவங்கிய @LinkedInIndia கணக்கை நிறைய பேர் ஃபாலோ செய்தீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இது எனது தனிப்பட்ட பக்கத்தை முடக்குவதற்கான @காரணமாக இருக்க முடியாது. இது மிகவும் மோசமானது மற்றும் அவர்கள் எனக்கு ஒரு காரணத்தை மின்னஞ்சல் கூட செய்யவில்லை. அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறார்கள் என்று நம்புகிறேன்", என்றார்.






கணக்கை மீட்ட சன்னி லியோன்


மேலே உள்ள வீடியோவை சன்னி லியோன் வெளியிட்ட அடுத்த தினமே, LinkedIn அவரது கணக்கை மீட்டெடுத்தது. இந்த தகவலை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட சன்னி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 41 வயதான நடிகை கடைசியாக ஸ்பிளிட்ஸ்வில்லா 14 இல் அர்ஜுன் பிஜ்லானியுடன் நடித்தார். விக்ரம் பட்டின் அனாமிகா, ஷீரோ என்று பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர், அனுராக் காஷ்யப்புடன் 'கொட்டேஷன் கேங்' படத்திலும் நடிக்கிறார்.