சுந்தரா டிராவல்ஸ்

முரளி வடிவேலு கூட்டணியில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் வயிறு வலிக்கும் அளவு சிரிக்க வைக்கக் கூடியவை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

சுந்தரா டிராவல்ஸ் 2

முதல் பாகத்தில் முரளி வடிவேலு நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் நடிகர் கருணாஸ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ் , சாம்ஸ் , விக்னேஷ் , அஞ்சலி , செவந்த் சென்ஸ் நாராயணன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். கறுப்பு தங்கம் இப்படத்தை இயக்கும் நிலையில் ஹரிஹரன் இசைமைக்கிறார். செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். 

பஸ் தான் ஹீரோ

சுந்தரா டிராவல்ஸ் படம் குறித்து படத்தின் இயக்குநர் கறுப்பு தங்கம் இப்படி கூறியுள்ளார் " இப்படத்தில் பஸ்தான் ஹீரோ. அதற்காக ஒரு பஸ் விலைக்கு வாங்கி அதை படத்திற்கு ஏற்றார்போல் தயாரி செய்திருக்கிறோம். கொடைக்கானல்  , பன்றிமலை போன்ற அடைவனப் பகுதிகளிலும் தென்காசி , காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க : 25 வருடத்திற்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகை...குட் பேட் அக்லி படத்தில் செம குத்தாட்டம்

25 நிமிடம் விளம்பரம் ஓட்டிய பி.வி.ஆர் நிறுவனம்...லிஸ்ட் போட்டு நஷ்ட ஈடு வசூலித்த இளைஞர்