குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் ,யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் ஜி.வி பிரகாஷ் குமார் பின்னணி இசையமைத்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது
அஜித்துடன் 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் சிம்ரன்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. வழக்கமான மாஸ் கமர்சியல் படமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் அளித்த படமாக இருந்தது விடாமுயற்சி. இப்படம் அனைத்து அஜித் ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் குட் பேட் அக்லி படம் ஒரு திரையரங்கில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே படத்தில் அஜித்தின் வெவ்வேறு லுக் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நிலையில் தற்போது இப்படம் பற்றிய கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாடலுக்கு கேமியோ செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் மற்றும் சிம்ரன் இணைந்து வாலி , அவள் வருவாளா மற்றும் உன்னை கொடு என்னை தருவேன் என மூன்று படங்கள் நடித்துள்ளார்கள். தற்போது சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி குட் பேட் அக்லி படத்தில் சேர்ந்து நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : சென்னையில் இல்லாத ஸ்கூலா..??? மும்பையில் எவ்வளவு செலவு பண்ணுறாரு தெரியுமா?
25 நிமிடம் விளம்பரம் ஓட்டிய பி.வி.ஆர் நிறுவனம்...லிஸ்ட் போட்டு நஷ்ட ஈடு வசூலித்த இளைஞர்