Sundar. C : லைகா நிறுவனத்துடன் கைகோர்க்கும் சுந்தர்.சி.. மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறதா சங்கமித்ரா..? அப்டேட் இதுதான்!

லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை இயக்க உள்ளார் சுந்தர்.சி. இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் 'முறைமாமன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர்.சி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினிகாந்த், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களை இயக்கிய சுந்தர்.சி குறித்து தற்போது வெளியாகியுள்ள ஒரு அப்டேட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

 

காஃபி வித் காதல்:

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், திவ்யதர்ஷினி, அபர்ணா பாலமுரளி, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'காஃபி வித் காதல்'. நகைச்சுவை, காதல் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவரான சுந்தர்.சி அரண்மனை படத்திற்கு பிறகு கொஞ்சம் ஹாரர் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். காமெடி கலந்த கமர்சியல் மசாலா திரைப்படம் தான் சுந்தர்.சியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பதால் திரும்பவும் நகைச்சுவை கலந்த காதல் கதைக்கு திரும்பியுள்ளார். சுந்தர்.சியின் 'காஃபி வித் காதல்' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. 

 

 

பிரமாண்டமான தயாரிப்பில் இணையும் சுந்தர்.சி : 

சுந்தர்.சி பெரிய பட்ஜெட்டில் 'பாகுபலி' திரைப்படம் போல 'சங்கமித்ரா' எனும் திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளை தொடங்கினர். ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், ஆர்யா உள்ளிட்டோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்க திட்டமிட்டு கடைசியில் படம் ஆரம்பித்த வேகத்திலேயே முடிவுக்கு வந்தது. தற்போது சுந்தர்.சி குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குனர் சுந்தர்.சி லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தினை இயக்க உள்ளார் என்பது தான் அந்த பரபரப்பான தகவல். ஆரம்பகாலத்தில் சுந்தர்.சி படங்களுக்கு இருந்த வரவேற்பு தற்போது குறைந்துள்ள இந்த சமயத்தில் பிரமாண்டமான படங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைவது எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதிலும் காமெடி படங்களில் கெட்டிக்காரரான சுந்தர்.சிக்கு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் சரியாக வருமா அப்படி என்றால் ஹீரோவாக யார் நடிப்பார் என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இது 'சங்கமித்ரா' திரைப்படம் அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

 

Continues below advertisement