Share Market : காலை ஏற்றதுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை வர்த்த நேர முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
வர்த்தக நேர முடிவில், 3.15 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 145.30 அல்லது 0.23% புள்ளிகள் உயர்ந்து 62,018.30 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 15.30 அல்லது 0.8% புள்ளிகள் உயர்ந்து 18,418.70 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.
காலை நிலவரம்:
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 107.57 அல்லது 0.170% புள்ளிகள் சரிந்து 61,765.42 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 30.30 அல்லது 0.16% புள்ளிகள் சரிந்து 18,373.10 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.
காலை 9.02 மணி நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 1252.77 அல்லது 0.41% புள்ளிகள் சரிந்து 61620.22 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 52.10 அல்லது 0.28% புள்ளிகள் சரிந்து 18351.30 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது . இன்றைய பங்குச்சந்தை சரிவில் தொடங்காமல் ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
கோடாக் மஹிந்திரா,கோல் இந்தியா, டாக்டர்,, ரெட்டிஸ் லேப்ஸ், ஹெச்.டி.எஃப். சி. வங்கி, ஹெச்.யு.எல்., டி.சி.எஸ்., இன்போசிஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பவர் கிரிட், லார்சன், ஓ.என்.ஜி.சி., விப்ரோ, நெஸ்லே, ஹூரோ மோட்டர்க்ராப், சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல். டெக். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை, அதானி எண்டர்பிரைஸ், டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெ.டி.எஃப். சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், ஐ.டி.சி., டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ்லேண்ட் வங்கி, ரிலையன்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஐ.டி.சி. மாருது சுசூகி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
ரூபாயின் மதிப்பு:
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 46 காசுகள் குறைந்து 81.37 ரூபாயாக உள்ளது
போலாந்து குண்டு வெடிப்பு சம்பம் உள்ளிட்டவைகளால் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகியது. இந்நிலையில், முடிவில் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.