மதகஜராஜாவுக்கு கிடைத்த ஆதரவை  பார்த்து 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் இருந்ததாக இயக்குனர் சுந்தர் சி நெகிழ்ச்சி போங்க தெரிவித்துள்ளார். 

மதகஜராஜா: 

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை மற்றும் விஷாலின் நடிப்பு ஆகியவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

சுந்தர் சி பேச்சு: 

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி சென்னையில் உள்ள திரையரங்களில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி பேசியதாவது “மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம், இந்த படம் போன கும்பமேளாவுக்கு வந்திருக்க வேண்டியது, ஆனால் இப்போது தான் வந்துள்ளது. படத்துக்கு மக்களிடம் இருந்து கிடைத்துள்ள வரவேற்பை பார்த்ததில்ம் இருந்து கடந்த 2 நாட்களாக கண்களில் கண்ணீருடன் தான் இருந்தேன். 

இதையும் படிங்க: Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்

எனக்கு தெரிந்து  இந்த தான் படத்திற்கு கிட்டத்தட்ட 100 சதவீகிதம் பாசிட்டிவ் விமர்சனம் வந்துள்ளது.மேலும் இந்த பொங்கலுக்கு வந்த எல்லா படமும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  மதஜராஜவை மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். 

ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு தான் 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அதனால் தான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தோம் என்று சுந்தர் சி தெரிவித்திருந்தார். 

 எகிறும் வசூல்:

விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சீனு மோகன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானத்தை இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல நகைச்சுவையான குடும்ப படமாக ரசிகர்ளுக்கு மதகஜராஜா அமைந்துள்ளதாக நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.