தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமானவர் சுந்தர்.சி. பல நல்ல தரமான நகைச்சுவை கலந்த புகைப்படங்களைக் கொடுத்து வந்த சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸ் மிகவும் பிரபலம். அந்த வகையில் கடந்த மே 3ஆம் தேதி சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் குஷ்பு, தமன்னா, ராஷி கண்ணா, விடிவி காமேஷ், கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார்.

Continues below advertisement

 

Continues below advertisement

பல முறை அரண்மனை 4 ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அரண்மனை படத்தின் மற்ற பாகங்களில் இல்லாத அளவுக்கு இந்த நான்காவது பாகத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் விஃபெக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.

இந்த ஆண்டு தமிழில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இருந்தாலும், ரூ.100 கோடி வசூலை ஈட்டி 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் என்ட்ரி கொடுத்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதே போல அரண்மனை படத்தின் மற்ற மூன்று பாகங்களைக் காட்டிலும் இந்த நான்காவது பாகம் தான் அதிக அளவிலான வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் வெளியாகி அங்கும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த வெற்றியை படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகை குஷ்பு அரண்மனை 4 வெற்றியைக் கொண்டாடும் வகையில் தன்னுடைய எக்ஸ் பக்கம் மூலம் சந்தோஷத்தையும் வெற்றியையும் உற்சாகத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். "திரையரங்குகளில் கொண்டாட்டம்... பாக்ஸ் ஆபீஸில் சாதனை. உலக அளவில் 100 கோடிகளை வசூலித்த 2024 ஆம் ஆண்டின் முதல் தமிழ்த் திரைப்படம். இதற்கு நீங்கள் எங்களுக்கு வழங்கிய அன்பும் ஆதரவும் தான் காரணம். 

சுந்தர்.சி என்றுமே தடுத்து நிறுத்த முடியாத பிளாக் பஸ்டர் என்டர்டெயினர். ஹிப்ஹாப் தமிழாவின் இசைக்கும் வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

தமிழ் திரை ரசிகர்களும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.