சுந்தர் சி , குஷ்பூ 25 வது திருமண நாள் விழா.. மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய சுந்தர் சி
Sundar C : சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது உறவினர்களுடன் பழனி மலை கோவிலில் சாமி தரிசனம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக உள்ளது பழனி முருகன் கோவில், தமிழ்கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த திருவிழாவை தொடர்ந்து தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.
இதையும் படிங்க: நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
அதேபோல பிரபல சினிமா நடிகர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம், யோகி பாபு என பல்வேறு திரைபிரபலங்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை கொண்டாடும் விதமாக பழனி முருகன் கோவிலுக்கு நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி மலை கோவிலில் தனது 25 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்தினார். மேலும் விழா பூஜைகள் கலந்து கொண்டு சன்னியாசி அலங்காரத்தில. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.பின்னர் மின் இழுவை ரயில் வழியாக கீழே இறங்கி சென்றனர்.