நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
அரசு பேருந்துகளை சிறப்பாக இயற்றிய மாநிலங்களுக்கு தேசிய பொது போக்குவரத்து விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 19 விருதுகள் கிடைத்துள்ளன.

அகில இந்திய அளவில் அரசு பேருந்துகளை சிறப்பாக இயற்றியதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 19 விருதுகள் கிடைத்துள்ளன.
நாட்டிலேயே சிறப்பாக இயக்கப்படும் அரசு பேருந்துகள்:
அரசு பேருந்துகளை சிறப்பாக இயற்றிய மாநிலங்களுக்கு தேசிய பொது போக்குவரத்து விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய மாநில சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில், 19 விருதுகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் சிறந்த சாலை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் (MTC) முதல் இடம் பிடித்துள்ளது.
அதோபோல, அகில இந்திய அளவில் நிதி நடைமுறைகளை சிறப்பாக பின்பற்றியதில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் (MTC) இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு (SETC) பணியாளர் உற்பத்தித்திறன் விருது (கிராமப்புறம்) கிடைத்துள்ளது. அதோபோல, மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை விருது (கிராமப்புறம்) கிடைத்துள்ளது.
விருதுகளை அள்ளி குவித்த தமிழ்நாடு:
வாகன பயன்பாட்டை (கிராமப்புறம்) பொறுத்தவரையில், மாநில விரைவு போக்குவரத்து கழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. கிராமப்புற அளவில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தியதாக டிஎன்எஸ்டிசி விழுப்புரத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி குறிப்பிடுகையில், "TNSTC-களுக்கு விருதுகள் குவியும் மற்றொரு வருடம். மொத்த விருதுகளில் TNSTC கிட்டத்தட்ட 30 சதவிகித விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: Travel With ABP : கோடை வெயிலுக்கு மினி கோவா ! எங்கே இருக்கு தெரியுமா ? மிஸ் பண்ணிடாதீங்க!