சின்னத்திரை என்றாலே அதற்கு அடையாளமாக விளங்கும் சேனல் சன் டிவி தான். காலம்காலமாக சன் டிவிக்கு ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு ஈர்ப்பு மரியாதை உள்ளது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு தனி மவுசு தான். காலை முதல் இரவு வரை ரசிகர்களை தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், கயல், சிங்கப்பெண்ணே, வானத்தைப் போல உள்ளிட்ட பல சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் முன்னணியில் இருந்து வருகிறது. 


அதே சமயத்தில் சரியான வரவேற்பை பெறாமல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் சொதப்பும் சில சீரியல்களை அதிரடியாக முடிவுக்கு கொண்டு வருவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. அந்த சீரியல்களை தூக்கிவிட்டு புதிய சீரியல்கள் தொடங்கப்படுகின்றன. அப்படி புதிதாக ஒரு சீரியலின் ப்ரோமோ தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 


 



நடிகர் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய சீரியல் 'லட்சுமி' என்ற பெயரில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தன்னுடைய தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அதே போல திருமணத்திற்கு பிறகு என்னுடைய மொத்த சம்பளமும் என்னுடைய குடும்பத்துக்கு தான் தருவேன். இந்த கண்டிஷன்களுக்கு எல்லாம் ஒத்து வருபவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஹீரோயின் மஹாலக்ஷ்மி சொல்கிறார். 


மறுபக்கம் தன்னுடைய பையனுக்கு வரும் பெண் கழுத்து நிறைய நகையுடனும் மாதத்தின் முதல் நாள் சம்பள பணத்தை கொண்டு வந்து தன்னுடைய கையில் கொடுக்கும் ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் நான் அவளை என்னுடைய மருமகளாக இல்லை மஹாலஷ்மியாக ஏற்று கொள்வேன் என கூறுகிறார் சஞ்சீவ் அம்மா. 


இப்படி ஒவ்வொருவரும் மனக்கணக்கு போட சாமி ஊர்வலம் வரும் போது சாமியின் கழுத்தில் இருந்த மாலையை ஐயர் எடுத்து வீசும் போது அது நேரடியாக ஹீரோ ஹீரோயின் கழுத்தில் போய்  சேர்ந்து விழுகிறது. இதுதான் கடவுளின் கணக்கு. இப்படியாக 'லட்சுமி' சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


 



குடும்பம் சார்ந்த சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் இந்த சீரியலின் ப்ரோமோவே அசத்தலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலின் ஹீரோ ஹீரோயின் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்த தொடர் என்று முதல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.