சன் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சீரியல் நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கிய இந்த தொடரில் நாயகன் கோபியின் தங்கைகளில் ஒருவராக காமு கதாபாத்திரத்தில் நடித்தவர் பென்சி ப்ரிங்ளின். இந்த தொடருக்கு பிறகு அவர் திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலிலும் நடித்திருந்தார்.
பென்சி ப்ராங்ளின் தனது திருமண வாழ்க்கையில் நடந்த சோகம் பற்றி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பது, நாதஸ்வரம் சீரியல் முடியும் தருணத்தில் எனக்கு திருமணம் ஆனது. பல கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். என் வாழ்க்கையில் எனக்கு விவகாரத்து ஆகும் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.
திருமண வாழ்க்கை நன்றாக இல்லாவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும். தொடக்கத்தில் கடுமையான மன அழுத்தமாக இருந்தது. நான் அனைத்து பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான். நீங்கள் என்ன படித்து இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு வேலை இருக்க வேண்டும். அதுதான் நமக்கு கை கொடுக்கும். விவகாரத்து ஆனதும் என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. மிகவும் வேதனையாக இருந்தது. எனக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள்.
நான் விவகாரத்து வாங்கியதால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று தயக்கம் இருந்தாலும் என்னால் அதற்கு மேல் அந்த உறவை தொடரவும் முடியவில்லை. என் குடும்பம் என்னை புரிந்து கொண்டனர். ஆனால், என்னால் இப்போது மற்றொரு திருமணத்தை பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருந்தபோதுதான் கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றேன்.
கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தேன். திருமுருகன் சார் முதல் ஒட்டுமொத்த அணியும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்ற ஆசை. விரைவில் திருமுருகன் சாரின் ப்ராஜெக்ட் மூலமாக அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று பென்சி கூறினார்.
நாதஸ்வரம் சீரியலிலும், கல்யாண வீடு சீரியலிலும் மிகவும் முக்கிய கதாபாத்திரமாக வலம் வந்த பென்சி திருமண வாழ்க்கையில் விவாரத்து எனும் சோகம் ஏற்பட்டிருப்பது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்