தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் எழுத்தாளர் ரெ.விஜயலட்சுமி. இவர் சமீபத்தில் 50 நாவல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். “வாசிப்பின் வாசல்” என்று புத்தகமாக்கப்பட்டுள்ள இந்த கட்டுரைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எழுத்தாளர் ரெ.விஜயலட்சுமியின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை, அசோக் நகரில் உள்ள மோகன வாசுகி அரங்கத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது. மணமக்கள் ரெ.விஜயலட்சுமி – வி.ஸ்ரீராம் பங்கேற்ற மணமேடையிலே மணமகள் ரெ.விஜயலட்சுமி எழுதிய “வாசிப்பின் வாசல்” நூல் வெளியிடப்பட்டது. இதனால், மணமேடையானது தமிழ் இலக்கிய மேடையாக காட்சியளித்தது.
மேலும், மணமக்கள் இருவரும் எழுத்தாளர்கள் என்பதால் திருமண விழாவிற்கு வந்த பலரும் எழுத்துத்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இதனால், திருமண விழாவிற்கு வந்த பலருக்கும் இந்த மணவிழா ஒரு புத்தக கண்காட்சியை போலவே காட்சி அளிக்கிறது. மணமகள் விஜயலட்சுமி யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று மூலமாக எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்காக தனது பல்வேறு உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
மேடை நாடக கலைஞர், திரைப்படக் கலைஞர், குறும்பட மற்றும் விளம்பரப்பட இயக்குனர், வசனகர்த்தா என பன்முகத்திறன் கொண்ட மணமகள் விஜயலட்சுமி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். மணமகன் வி.ஸ்ரீராமும் எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும் வலம் வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் மதுரை பாஸ்கர், ஊடகவியலாளர் ரமேஷ், சுவடு இதழின் ஆசிரியர் ரா.லிங்கம், சுவடு பதிப்பக உரிமையாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
மேலும் படிக்க : Sujitha Dhanush | எட்டயபுரம் வீடு.. தெரியாத கதைகள்.. பாரதியார் பிறந்த இல்லத்தை சுற்றிக்காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..
மேலும் படிக்க : Farina Azad On Hijab Row | உங்க மனைவிக்கு இத பண்ணமுடியுமா? ஹிஜாப் விவகாரத்தில் கொந்தளித்த பாரதி கண்ணம்மா வெண்பா..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்