சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சுஜிதா தனுஷ் பாரதியாரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளில் ஃபேவரைட் சீரியலாக உள்ளது. சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், என எவர்க்ரீன் கான்செப்ட் எடுத்து கூறும் வகயைில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாலும் இந்தியாவுக்கே உரிய அக்மார்க் கதைக்களம் என்பதாலும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.



பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் குழந்தையாக இருந்தபோதே, ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ள இவர், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா 'கதைகேளு கதைகேளு' என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் தனியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






மேலும் தமிழ் மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள சுஜிதாவை ரசிகர்களிடம் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்தான். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடுவது வழக்கம். தற்போது இவர் தமிழின் ஆகச்சிறந்த கவி என போற்றப்படும் புரட்சிக்கவிஞர், சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலுடன் தொடங்கும் இந்த ரீல்ஸ் விடியோவில், சுஜிதா தனது குழந்தைகளுடன் வீட்டை சுற்றி பார்க்கிறார். அங்கிருக்கும் ஒரு பெண் பாரதியார் வாழ்க்கை குறிப்புகளை எடுத்து சொல்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.