தமிழ் சூழலில் சீரியல்களின் பங்கு முக்கியமானது. தற்போது இருக்கும் பெரும்பாலான சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கிவைத்தது சன் டிவி என சொல்லலாம்.


குறிப்பாக ஒரு சேனலை டிஆர்பியில் உச்சம் கொண்டு செல்வதிலும் சீரியல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போதைய நிலவரப்படி டாப்பில் இருப்பது ரோஜா சீரியல்.


இரவு 9 மணியிலிருந்து 9.30 மணிவரை ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபு சூர்யன் கதாநாயகனாகவும், ரோஜா கதாபாத்திரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரும் நடிக்கின்றனர். தற்போது, இந்த சீரியல் சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ளது. 


இந்தநிலையில், உலகமே பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டடி வரும் வேளையில் ரோஜா கதாபத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா நல்காரும் தனது குடும்பத்துடன் ஜாலியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறது.  இதற்காக இவர் தனது குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். 


இதுகுறித்து, அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது நான் விடுமுறையில் இருக்கிறேன். குடும்பத்துடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடி வருகிறேன். இந்த பிரேக் மூலம் எனது மனதிற்கு அமைதி ஏற்பட்டுள்ளது "என்று பதிவிட்டுள்ளார்.






தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் பெண்கள் அணியும் உடைகளை போன்று பிரியங்கா நல்காரும் அந்த உடைகள் அணிந்து புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதைபார்த்த அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண