டென்னிஸ் வீரரான ஜோகோசிச்சின் விசாவை இரண்டு முறை ரத்து செய்த நிலையில், ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் எப்படியாவது பஙகேற்ற வேண்டும் என இப்பிரச்சனைக்குறித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது.


ஆஸ்திரேலியாவில் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியன் ஒப்பன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபறவுள்ளது. இதில் பங்கேற்க வேண்டும் என்றால் கொரோனா தடுப்பூசிகள் இரு தவணைகளும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு  ஆஸ்திரேலியா வந்துள்ள வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால், உலகின் நம்பர் 1 டென்னஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, அவரின் விசாவையும் ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்தது. மேலும் ஜோகோவிச் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் தான் ஜோகோவிச்சினை விக்டோரிய மாகாண அரசு தடுத்து வைத்துள்ளது என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.  இதோடு மக்களின் சுகாதாரம் மற்றும் நல் ஒழுங்கு அடிப்படையில் பொது நலன் கருதி விசாவை ரத்து செய்ததாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.





இதனையடுத்து தான் டென்னிஸ் வீரர் விசாவை ரத்து செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் தனக்கு உடல் ரீதியான பிரச்சனை இருப்பதாலும், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டேன் என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்பை  ஜோகோவிச் மீறியுள்ளதாகவும், பொய்யான தகவலைக்காட்டி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


இவ்விரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்தது. மேலும் தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் தடுப்பு காவல் மையத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாாவ்கே, தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப்பயன்படுத்தி மீண்டும் டென்னிஸ் வீரரின் விசாவை ரத்து செய்தார். இத்தகைய நடவடிக்கையால் தன்னுடைய வாழ்நாளில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செர்பியன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தற்போது ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும்  முதல் சுற்று போட்டிகளின் அட்டவணை தயாராகி உள்ள நிலையில விசா பிரச்சனை இன்னும் முடிந்தப்பாடில்லை.





இந்நிலையில் தான் தன்னுடைய விசாவை 2 முறை ரத்து செய்தது தொடர்பாக உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருந்தப்போதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிடில் நாட்டில் அனுமதி மறுக்கப்படும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியா அரசு ஒருபோதும் மாற மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. நோவாக் ஜோகோவிச் சட்டப்போராட்டங்களுடன் வென்று ஆஸ்திரேலியா ஒபன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பரா? என்பது குறித்து பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.