சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் குணசேகரனை தேடி ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார். விசாலாட்சி அம்மாவிடம் சொல்லி அனைவரையும் அழைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்ல சொல்கிறார். ஆவேசமாக வந்த கதிரும் ஞானமும் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.
அடுத்ததாக தர்ஷனை அழைத்து கையெழுத்து போட சொல்கிறார். ஆதிரை அவன் போட மாட்டான் என சொல்ல "எனக்கு இது எதுவுமே தேவையில்லை. என்னை யாரும் தடுக்காதீங்க" என சொல்லி கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறான் தர்ஷன். "இனிமேல் அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே இனி நான் தான்" என ஆணவமாக சொல்கிறார் குணசேகரன்.
அந்த நேரத்தில் வக்கீல் குணசேகரனுக்கு போன் செய்து ஜனனி சிஎம் செல் வரை சென்ற விவரத்தை சொல்ல குணசேகரன் டென்ஷனாகிறார். "எங்க வேணும்னாலும் யாரை வேணும்னாலும் போய் பாருங்க. உண்மை ஒரு நாள் வெளியில் வரும்" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார் குணசேகரன்.
ஜனனியும் சக்தியும் தர்ஷினி கேஸை விசாரிக்க வரும் அதிகாரியை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள். அவர் வந்ததும் ஜனனியிடம் அறிமுகம் செய்து கொண்டு மேல் அதிகாரியை பார்ப்பதற்காக அழைத்து செல்கிறார். ஏற்கனவே விசாரித்த இன்ஸ்பெக்டர் வந்ததும், ஜீவானந்தம் எஸ்கேப்பான விஷயத்தை பற்றி சொல்லி வார்ன் செய்யவும், அதை கேட்டு ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இன்னும் மூணு நாளில் நான் அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறேன் அப்படி இல்லை என்றால் அந்த பொண்ணு இல்லை" என ஸ்பெஷல் ஆபீஸர் சொல்கிறார். அவருடன் ஜனனி மட்டும் செல்கிறாள்.
வீரசங்கிலி என்ற ஒரு ரவுடி தான் தர்ஷினியை கடத்தி வைத்து இருக்கிறான். புது இடத்தில் தர்ஷினியை அடைத்து வைத்து இருக்கிறார்கள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் வீரசங்கிலியின் கூட்டாளி ஒரு பெண்ணிடம் தான் தர்ஷினியை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. மிகவும் பயங்கரமாக தர்ஷினியை மிரட்டி வைத்திருக்கிறாள் அந்த பெண் ரவுடி. அவள் மிரட்டிய மிரட்டலில் "நீங்க சொல்றதை நான் சொல்லிடுறேன். என்னை எங்கம்மா ஈஸ்வரி கிட்ட மட்டும் விட்டுருங்க ப்ளீஸ்" என சுயநினைவு இல்லாமல் காயங்களுடன் படுத்து இருக்கும் தர்ஷினி புலம்புகிறாள். அதை பார்த்த வீரசங்கிலி அதிர்ச்சி அடைகிறான்.
சிறப்பு அதிகாரி கொன்றவை ஜனனியிடம் தர்ஷினி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். "தர்ஷினியோட வீடியோவை பார்க்கும் போது அவர் சுய நினைவிலேயே இல்லை என்பது தெரிகிறது. மென்டலி, எமோஷனலி வீக்கா இருக்கா" என கொன்றவை சொல்ல அதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.
வீட்டில் ஞானம்,குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறான். "உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்?" என குணசேகரன் திமிராக பேச "சொல்லணும் அண்ணன். எங்களுக்கு எல்லாருக்கும் இதுல சம்பந்தம் இருக்கு. சொல்லி தான் ஆகணும்" என ஆவேசமாக ஞானம் பேச மிகவும் ஆணவமாக குணசேகரன் பேசுகிறார். அவர் பேசுவதை பார்த்த விசாலாட்சி அம்மாவே அதிர்ச்சி அடைகிறார். அவரின் தம்பி சாமியாடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் சுற்றி நின்று குணசேகரனை கேள்வி கேட்கிறார்கள். என்ன சொல்வதென தெரியாமல் அவர்களை அடக்க முயற்சிக்கிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.