சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று 'அன்பே வா'. 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விராட், டெல்னா டேவிஸ், அம்பிகா, அருண் குமார், மஹாலக்ஷ்மி மற்றும் பலர் நடித்து வரும் இந்தத் தொடர் இரவு 10.30 மணி முதல் 11.00 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் நாயகனாக வருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விராட்டுக்கு எக்கச்சக்கமான ஃபேன்ஸ் உள்ளனர்.
சினிமா அறிமுகம் :
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விராட் 12ஆம் ஆண்டு படிக்கும்போதே சினிமாவில் அடியெடுத்து வைத்துவிட்டார். 2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'பிளாக்' என்ற படத்தின் மூலம் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் '10th க்ளாஸ் ஏ செக்ஷன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். படிப்படியாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் கன்னடத் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.
எக்கச்சக்கமான ஃபேன்ஸ் :
2018ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான பேரழகி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் தான் 'அன்பே வா' வாய்ப்பு கிடைத்தது. வருண் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பூமிகா - வருண் இடையே வரும் ரொமான்ஸ் சீன்களை ரசிக்கவே ஒரு கூட்டம் இருந்தது. அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதற்கு அவருக்கு இருக்கும் எக்கச்சக்கமான ஃபேன்ஸ் பேஜஸ் தான் சாட்சி.
நடிகர் மற்றும் பாடகர் :
ஒரு நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு பாடகராகவும் சில கன்னட படங்களில் பாடியுள்ளார். இந்துஸ்தானி இசையை முறையாக பயின்றவர். அவரின் குடும்பமே இந்துஸ்தானி இசையை பின்னணியாக கொண்டவர்கள். கிராபிக்ஸ் டிசைனராகவும் டெக்னீஷனாகவும் ஒரு சில படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.
விராட் திருமணம் :
மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வரும் விராட்டுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. செலிப்ரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நவீனாவும் நடிகர் விராட்டும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் இன்று மகாபலிபுரத்தில் உள்ள பீச் ரெசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் ஏராளமான சின்னத்திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்களும் விராட்டுக்கும் நவீனாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.