தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா தம்பதி.  இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற  மகனும் உள்ளனர்.


மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? 


சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ஒரு  படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் செட்டிலாகி விட்டதாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வந்தன. 


இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களைச் சந்தித்த சூர்யா, அவர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். அப்போது மும்பையில் அவர் செட்டிலாகிவிட்டதாகக் கூறப்படுவது பற்றி ரசிகர் ஒருவர் கேட்டார். அப்போது சூர்யா கூறுகையில், தனது மகள் தியா, மகன் தேவ் இருவரும் மும்பையில் படித்து வருகின்றனர். அவர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுவருகிறேன். மற்றபடி நான் சென்னையில்தான் இருக்கிறேன். மும்பையில் செட்டிலாகவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் சூர்யா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


10 மொழிகளில் கங்குவா:


நடிகர் சூர்யா, ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா  பதானி, நட்டி , பாபி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான், சீன மற்றும் கொரிய உட்பட 10 மொழிகளில் உருவாகிறது. இதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 43-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.


ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை 23-ஆம் தேதி நள்ளிரவு 12.01க்கு வெளியானது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வீடியோ வெளியானது. 


 ஒருவரை சூர்யா கொல்லும் ஷாட் உடன் கங்குவா கிளிம்ப்ஸ் தொடங்கி கூஸ்பம்ப்ஸ் தருகிறது. சிறுத்தை சிவாவுக்கே உரித்தான நான் ஸ்டாப் டயலாக் பின்னணியில் தெறிக்கவிட்டிருக்கிறார். சூர்யாவின் கெட்அப் கவனம் ஈர்க்கிறது. இறுதியில் நலமா என சூர்யா கேட்கும் வித்தியாசமான தொனியுடன் முடிகிறது. கிளிம்ப்ஸ் வீடியோவில் படத்தின் பிரமாண்டம் தெரிகிறது.


மேலும் படிக்க


ஆளுநர் தமிழிசை பயணித்த விமானம்.. பாஜகவை எதிர்த்து கோஷமிட்ட பெண்.. வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்


Senthil Balaji Brother: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் அமலாக்கத்துறையில் சரண்டராக முடிவு - வழக்கறிஞர் தகவல்