80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஹாசினி. தென்னிந்தியாவை மையப்படுத்தி தெற்கின் எழுச்சி என்ற பெயரில் "ABP Southern Rising Submit 2023" என்ற பெயரில் பிரமாண்ட கருத்தரங்கு சென்னை தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் மற்றும் பிரபலமான செலிபிரிட்டிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினி பல ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்.
கமல் - மணி காம்போ :
கமல்ஹாசன் மணிரத்னம் காம்போவில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நாயகன் திரைப்படம் என்றுமே என்னுடைய பேவரைட் திரைப்படம். அப்போது தெரியாது நான் மணிரத்தனத்தை தான் திருமணம் செய்து கொள்ளபோகிறேன் என்று. ஒரு ஃபேனாக மீண்டும் அவர்கள் இருவரும் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த படம் பற்றிய விஷயங்களை லீக் செய்து விடுவேன் என என்னிடம் மணி சொல்வதில்லை. ஆனால் விரைவில் அதன் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.
மிகவும் பிடித்த ரோல் எது ?
கடந்த 42 ஆண்டுகளாக நடித்து கொண்டு இருப்பதால் நடிப்பு என்பது எனக்கு ஈஸியாக இருக்கிறது. ஒரு ஷோ ஹோஸ்ட்டாக இருப்பதால் என்னால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதால் நாம இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாமே என தோணும். ஆனால் என்னுடைய ஷோக்கு வரும் கெஸ்ட் அனைவரும் மிகவும் கம்பர்ட்டாக ரிலாக்ஸாக உணர்கிறார்கள். அதை பார்க்கும் போது நான் நன்றாக தான் செய்கிறேன் என தோன்றும். ஒரு இயக்குநராக நடிகர்களை இயக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த மூன்றில் இயக்குநர் ரோல் என்பது மிகவும் பிடிக்கும்.
என்னுடைய படங்களை நான் இயக்குவதற்கு முன்னர் ஸ்கிரிப்டை பார்த்து இது இப்படி இருக்கலாம் அது அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சில திருத்தங்களை மணி சொல்லவர். ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகு அதில் தலையிட மாட்டார்.
பேவரட் இயக்குநர் யார் ?
இன்றைய கலக்கட்டது இயக்குநர்களில் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித், மாரி செல்வராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என பல இயக்குநர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் ஆக்டிங் கூட காவலன் படத்திற்கு பிறகு எனக்கு அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கிறது.
வுமன் சென்ட்ரிக் படங்கள் :
மனதில் உறுதி வேண்டும் போன்ற ஸ்ட்ராங்கான படங்கள் மற்றும் எனக்கு, ராதிகா, ரேவதிக்கு வந்ததுபோல வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் அவ்வளவாக வருவதில்லை. ஆனால் இன்று இருக்கும் நடிகைகளுக்கு முன்பை விட எக்ஸ்போஸ்சர் அதிகமாக இருக்கிறது. அவர்களால் இன்னும் பெட்டராகவே பண்ண முடியும். அதனால் அவர்களுக்கு அது போன்ற சப்ஜெட் படங்கள் நிறைய கிடைத்து அவை வெற்றியும் பெற வேண்டும்.
மலையாளத்தில் சுஹாசினி நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. அதை தவிர இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.