நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா விரைவில் ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.  இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அக்ஸ்த்யா நந்தா,  போனி கபூரின் மற்றொரு மகளான குஷி கபூர் உள்ளிட்ட பல அடுத்த தலைமுறை வாரிசு நடிகர், நடிகைகள் அறிமுகமாக உள்ளனர்.


மேலும் புதுமுகங்கள் வேதாந்தா ரெய்னா, மிஹிர் அஹூஜா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 1960களில் நடக்கும் ம்யூசிக்கல் படமாக உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.


கல்லி பாய் உள்ளிட்ட படங்களை எடுத்த பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜோயா அக்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபல ஆங்கில காமிக்ஸான ஆர்ச்சிஸைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஹானா கான் முழு வீச்சில் இந்தப் படத்துக்காகவும் தன்னுடைய பாலிவுட் எண்ட்ரிக்காகவும் தயாராகி வருகிறார். 


அதன்படி, தன் சினிமா வருகைக்காக நடனக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து வரும் சுஹானா, முன்னதாக தன் கால்களில் கட்டுப்போட்ட நிலையில், புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


ஓ... எனும்  ரியாக்‌ஷன் உடனும் சோக ஸ்மைலியுடனும் சுஹானா இந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ள நிலையில், ஒருவேளை சுஹானா கால்களை உடைத்துக் கொண்டாரா என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சுஹானா பாலே நடனப் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாகவும், பாலே நடனப்பயிற்சியின் போது இதுபோல் கால்களில் கட்டுப்போட்டு தான் பயிற்சி கொள்கிறார்கள் என்றும் மற்றொருபுறம் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




ஷாருக்கான் மகள் சுஹானா கான் இந்த திரைப்படத்தில் நடிக்கும் சமயத்தில் சுஹானா கான் மாற்றும் அகஸ்தியா நந்தா இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டதாகவும், இருவரும் தொடர்ந்து டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த தகவல் தற்போது பாலிவுட் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


கடந்த 22 ஆம் தேதி தன் 22ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சுஹானா கானுக்கு அவரது தந்தை ஷாருக்கான், தன் இன்ஸ்டா பக்கத்தில் க்யூட்டான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்து இருந்தார்.


சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் சுஹானா, இங்கிலாந்தில் பட்டப்படிப்பு படித்து முடித்த கையுடன் நியூயார்க் சென்று அங்கு நாடகம் மற்றும் நடிப்பு பயிற்சிகளை கற்றுத் தேர்ந்து தன் பாலிவுட் எண்ட்ரிக்காக முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆர்ச்சிஸ் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.