இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ஆடி கார் வாங்கியதோடு தன் நண்பர்கள் சூர்யா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோரை தன் காரில் அழைத்துச் சென்று புகைப்படம் பகிர்ந்துள்ளார்.


முதல் எலெக்ட்ரிக் கார்


இயக்குநர் சுதா கொங்கரா புதிதாக ஆடி கார் வாங்கியதோடு தன் நண்பர்கள் சூர்யா, ஜி.வி. பிரகாஷ் ஆகியோரை தன் காரில் அழைத்துச் சென்று புகைப்படம் பகிர்ந்துள்ளார்.





பல ஆண்டுகளாக ஆண் இயக்குநர்கள் கை மேலோங்கி இருக்கும் தமிழ் சினிமாவில், இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை இயக்கி பலருக்கும் இயக்குநராக உருவெடுத்திருப்பவர் இயக்குநர் சுதா கொங்கரா.


பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த சுதா கொங்கரா


இறுதியாக சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்ததோடு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமேசான் ஓடிடிதளத்தில் வெளியானது.


ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் கோலிவுட் தாண்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை,சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளி சாதனைப் படைத்தது.


தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ள சுதா கொங்கரா ‘சூரரைப் போற்று’ படத்தை பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் இயக்கி வருகிறார்.


சூர்யா, மணிரத்னத்துடன் புகைப்படம்


இந்நிலையில் முன்னதாக ஆடி கார் வாங்கியுள்ள சுதா கொங்கரா, அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.




முதன்முறையாக தான் எலெக்ட்ரிக் கார் வாங்கியுள்ளதைத் தன் பதிவில் குறிப்பிட்டுள்ள சுதா கொங்கரா தன் நண்பர்களான நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தன் குரு மணிரத்னம்,நடிகர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருடன் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.




சுதா கொங்கரா ஏர் டெக்கான் கோபிநாத் பயோபிக் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அப்படத்தில் ரத்தன் டாடாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அல்லது நடிகர் சூர்யா நடிக்க கூடும் என பேசப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


இதையும் படிங்க: FIFA 2022: மலையாள சூப்பர் ஸ்டார்கள் டூ பாலிவுட் நடிகர்கள் வரை... உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்!