பாலிவுட்டில் மிக பிரபலமானவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி,  இவர் பாலிவுட்டின் பிரபல நடிகை மற்றும் பாடகி. அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடியும்.கபி ஹான் கபி நா, ஜஸ்பாத், வாதே இராதே, மை வைஃப்ஸ் மர்டர், ரான், ரோமியோ அக்பர் வால்டர்  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் கியாரா அத்வானியின் பூல் புலையா 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது பாலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். விவாகரத்திற்கு பிறகு சிங்கிள் பேரண்டாக வாழ்ந்துவரும் சுசித்ரா சமீபத்தில் டேட்டிங் செயலியை பயன்படுத்தியிருக்கிறார்.






இளம் வயது திருமணம் :


சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி சேகர் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு காவேரி என்னும் மகள் இருக்கிறார். டீன் ஏஜிலேயே திருமணம் செய்துக்கொண்ட சுசித்ராவிற்கு திருமண வாழ்க்கை அத்தனை இனிமையானதாக இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று  தனியாக வாழ்ந்து வருகின்றனர். மகள் காவேரி அம்மாவின் வளர்ப்பு. என்னதான் சுசித்ரா இந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பெண்ணாக இருந்தாலும் , தன்னை பழமைவாதி என்றே அடையாளப்படுத்துகிறார்.






டேட்டிங் ஆப்!


சுசித்ராவின் மகள் காவேரி அம்மாவின் தனிமையை உணர்ந்து , அவருக்கு டேட்டிங் ஆப் ஒன்றை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதில் சுசித்ராவிற்கென தனி கணக்கினை தொடங்கிய மகள் , அதனை பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதில் நாட்டம் இல்லாவிட்டாலும் முன்னதாக தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாக மகளுக்கு சத்தியம் செய்திருந்தாரம் சுசி. அதனால் ஒப்புக்கொண்டுள்ளார். டேட்டிங் ஆப் பயன்படுத்திய சில காலத்திற்கு பிறகு சிலருடன் டேட்டிங் செல்ல மகள் அடம்பிடித்திருக்கிறார். ஆனால் அது சுசித்ராவிற்கு சலித்துவிட்டது. டேட்டிங் சென்ற நபர்களை நண்பர்களாக்கிக் கொண்டாராம் சுசித்ரா. அதன் பிறகு தனது மகளிடம் உனக்காகத்தான் இதையெல்லாம் செய்கிறேன்,. எனக்கு இதில் விருப்பமில்லை. நான் நானாக இருப்பதையே நலமாக நினைக்கிறேன் என கூறிவிட்டு அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.