நாள்: 17.06.2022


நல்ல நேரம் :


காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை


மாலை 04.30 மணி முதல் 05.30 மணி வரை





கௌரி நல்ல நேரம் :


காலை 12.30 மணி முதல் 01.30 மணி வரை 


மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை


இராகு :


மதியம் 10.30 மணி முதல் 12.00 மணி வரை


குளிகை :


காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை 


சூலம் –மேற்கு


ராசி பலன்கள் 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நவீன தொழில்நுட்ப கருவிகள் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் குறையும் நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவு மேம்படும் நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அசதி நிறைந்த நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார பணிகளில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் பொருட்சேர்க்கை உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, சமூக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் மற்றும் புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாதத்திறமைகளின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உறவுகள் மேம்படும் நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். துன்பங்கள் குறையும் நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண