சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றிய கனல் கண்ணன்,பல படங்களில் சண்டை காட்சிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர். 1991 ஆம் ஆண்டு சேரன் பாண்டியன் படத்தில் அறிமுகமான அவர் 2017 ஆம் ஆண்டு கடைசியாக குருதிப்பூக்கள் என்ற படத்தில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக பணியாற்றியிருந்தார். இதற்கிடையில் சங்கரன்கோவில், சற்றுமுன் கிடைத்த தகவல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடத்துள்ளார்.
இதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்து முன்னணி நிறுவனத் தலைவரான ராமகோபாலன் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்ட கனல் கண்ணன் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று பேசியுள்ளார். அந்த வகையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த தொடர் பிரச்சார பயணம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைந்தது. சென்னை மதுரவாயலில் இதன் நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கனல் கண்ணன், ஸ்ரீரங்கநாதனைக் கும்பிடுவதற்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் கோவிலுக்குள் சென்றுன் வருகிறார்கள்.அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை..கடவுளே இல்லை என்ற சொன்னவரின் சிலை (பெரியார் சிலை) என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள் என தெரிவித்துள்ளார். மேலும் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் இன்றோடு முடிந்து விடாது. இனிமேல் தான் இன்னும் தீவிரமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் கனல் கண்ணன் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் கனல் கண்ணனுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து வருவதோடு, அவரை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read | Mayiladuthurai Kidnap: மயிலாடுதுறையில் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்