70,80 களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் , ராஜ்குமார் என பலருக்கும் சண்டைப்பயிற்சி  கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்தினம் . இதுவரையில் 1500 படங்களுக்கு மேலே சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் ரத்தினம் . பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்தினம்தான் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுப்பாராம். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்தினம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார். ரஜினி குறித்து பேசிய ரத்தினம் “ரொம்ப பண்பானவர், மாஸ்டர் ஜினுதான் கூப்பிடுவார் “ என்றார்.  ரஜினியின் முரட்டுக்காளை திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் படத்தின் சண்டைக்காட்சிகள்தான். அந்த படத்தில் ரயிலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றில் , என் மகன் ராமை இழந்திருப்பேன். ஆனால் சிறு காயங்களுடன் தப்பித்தார் என இப்போது அந்த நினைவுகளை கண்ணீரோடு அசைபோடுகிறார் ஜூடோ ரத்தினம். ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டாராக்கியதே நான்தான் என பெருமைப்படுகிறார் ஜூடோ ரத்தினம் 


கமலுக்கு  6 படங்களுக்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர் . கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு  56 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி செய்தாராம் . வீட்டில் கடவுளுக்கு நிகராக மதித்த ராஜ்குமாரை ஜேம்ஸ் பாண்ட்டாக மாற்றிவிட்டாராம்.தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஏற்ற மாதிரியாக சண்டைப்பயிற்சிகளை சொல்லிக்கொடுப்பாராம் . ஜெய்சங்கர் , கமல் , ரஜினி , சிவாஜி , ராமராஜன் என ஒவ்வொரு கலைஞர்களின் திறனுக்கு ஏற்ற மாதிரியான பயிற்சிகளை வழங்குவாராம் . தனது வாழ்நாளில் சிறந்த சண்டப்பயிற்சி செய்த நடிகர்கள் என்றால் அது அர்ஜூன்தான் என்கிறார். அவர் உண்மையிலேயே ஆக்‌ஷன் கிங்தான் என்னும் ரத்தினம் .அவருக்கு பிறகு விஜயகாந்த் டூப் போடாமல் சண்டைப்பயிற்சி அருமையாக செய்வாராம் . ஆனால் திருப்பம் படத்தில் சிவாஜிக்கு திரும்பி பார்க்காமல் சண்டை போட கற்றுக்கொடுத்தாராம் . அவர் அதற்காக பல டேக்குகளை வாங்கியதாக கூறுகிறார். 




எம்.ஜி.ஆர் காலக்கட்டத்திலியே ஜூடோ பயிற்சியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ரத்தினம் , கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அதனால் அதிமுகவை சேர்ந்த எம்.ஜி.ஆருக்கு தான் சண்டைப்பயிற்சி செய்யவில்லை என்கிறார். தனது கம்யூனிஸ்ட் தோழியான மனைவி மறைந்த பிறகு தனியாக வசித்து வரும் ஜூடோ ரத்தினம் வீட்டில் சமீபத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் 5 விலை உயர்ந்த பட்டுசேலைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த2 ரோலக்ஸ் வாட்ச்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். 90 வயதிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குடியாத்தம் மூன்றடுக்கு மாடி வீட்டில் தனியாக வசித்து வருகிறார் ஜூடோ ரத்தினம் .